கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரம் சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தோமிணிக்(வயது 27), ஜான்பீட்டர்(39) என்பதும், அவர்கள் அனுமதியின்றி 2 நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தோமிணிக், ஜான்பீட்டர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். #tamilnews