காஷ்மீர் மாநிலத்தின் இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று சுந்தெர்பானி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். தெங்தார் மற்றும் கெரான் செக்டார்களிலும் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.