செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கு - உள்ளாட்சி தேர்தலை முன்வைத்து ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் வழக்கை விரைந்து முடிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கோரியுள்ளது. #OPS

மாலை மலர்

புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் தற்போது நடந்து வருகிறது.

இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை  விரைந்து முடிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து, வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.