ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று அதிகாலை இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் அவர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அங்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews