கொழும்பு:
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்திச் சென்ற இருவரை இலங்கை கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர்.
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் வளைகுடா கடற்படையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நாட்டுப் படகை மடக்கிப் பிடித்த இலங்கை கடலோர காவல் படையினர், அந்த படகில் தீவிரமாக சோதனை நடத்தினர். படகில் வந்த தனுஷ்கோடி மாவட்டத்தை சேர்ந்த இருவரும் 425 கிராம் எடையுள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை கடத்தி வந்திருப்பது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, நாட்டுப் படகுடன் அவர்கள் இருவரையும் கடலோரக் காவல் படையினர் கைது செய்து தலைமன்னார் பகுதிக்கு அழைத்து சென்றனர். பிடிபட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Tammilnews