புதுடெல்லி:
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமான தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மதியம் இலகுரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
அப்போது திடீரென அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானியும், உதவி விமானியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,
தகவலறிந்து அங்கு சென்ற விமானப்படை அதிகாரிகள், நொறுங்கி கிடந்த விமானத்தின் பாகங்களை பார்த்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர். #tamilnews