செய்திகள்

காஷ்மீர் - துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Pulwamaencounter

மாலை மலர்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட டிராப்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சந்தேகத்துக்குரிய பகுதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவன் சமீர் டைகர் என்றழைக்கப்படும் சமீர் அஹமத் பட் என்பது தெரியவந்துள்ளது. #JammuKashmir #Pulwamaencounter