செய்திகள்

விழுப்புரத்தில் மதுவிலக்கு பிரிவு பெண் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் ஆயுத படைக்கு மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்காத மதுவிலக்கு பிரிவு பெண் போலீஸ் ஏட்டுகள் 2 பேரை ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டுகளாக கனிமொழி, ரபேகா ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 2 பேரும் சாராய வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு திருக்கோவிலூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து ஏட்டுகள் கனிமொழி, ரபேகா ஆகிய 2 பேரையும் விழுப்புரம் ஆயுத படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.