வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(வயது21). இவர் அதேபகுதியில் உள்ள மில்லில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த மில்லில் சுக்காம்பட்டியை சேர்ந்த முத்துமணி(19) என்பவரும் பணிபுரிந்துள்ளார்.
இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் காதலுக்கு வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவையில் உள்ள கோவில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி காதல்ஜோடியை அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் வாழக்காய்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வடமதுரையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.
வாலிபர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பதால் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.