செய்திகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு போலீசார் பலி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் போலீசார் இருவர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில் போலீசார் இருவர் உயிரிழந்ததாக காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஹைடர்போரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது இரவு 9.30 மணியளவில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்தியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த இரு பேலீசார் 92 பேஸ் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் காவலர் ஷேஷாத் மருத்துமனையில் தீவிரவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வடக்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதலில் இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் காவலர் ஷபீர் அகமது அவரது வீட்டிற்கு வெளியே சுடப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.