திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் சகோதரர்கள் அயனேஸ்வரன் (10), பாலன் (9) விளையாடும்போது 50 அடி உள்ள பாறைக்குழியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்தனர். தத்தளித்த இருவரும் பாறைக்குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அயனேஸ்வரன் உடலை மீட்டனர். சகோதரர் பாலன் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.