செய்திகள்

பார்டியின் போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரு சிறுவர்கள்

வாஷிங்டனில் சிறுவர்கள் பங்கேற்ற பார்டியின் போது 14 வயது சிறுமியை 16 வயதுடைய இரு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நண்பர்கள் வீட்டில் பார்ட்டியில் பங்கேற்ற 14 வயது சிறுமியை, 16 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமியின் நிர்வாணப் படத்தை ஸ்னாப் சேட்டிலும் பதிவேற்றி இருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் தெரிவித்த சிறுமி கூறியதாவது, ஏரோ பாய்ண்ட் பகுதியில் தனது நண்பரின் வீட்டில் பார்ட்டியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எனக்கு மயக்கம் வந்தது. அடுத்த நாள் கண்விழிக்கையில் தனது ஷீ-வில் ரத்தம் இருந்தது. மேலும் கடுமையான வயிறு வலியும் ஏற்பட்டது என்று அந்த சிறுமி கூறினாள்.

தனது போட்டோக்கள் ஸ்னாப்சேட்மூலம் இணையதளத்தில் பரவி வருவதாக, பார்ட்டியை தயார் செய்த சிறுவன் கூறியதாகவும் தெரிவித்தாள். மேலும் அந்த சிறுமயை ஒரு கேரேஜில் பார்த்த சிறுவன், அவளது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறான்.

அந்த பார்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மயக்கம் அடைவதற்கு முன்பாக அந்த சிறுமி அதிக அளவில் மதுஅருந்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதளத்தில் போட்டோ பதிவேற்றிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT