கோப்பு படம் 
செய்திகள்

கோவையில் குட்கா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

கோவையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ளது செட்டிபாளையம் பிரிமியர் நகர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிலர் மூட்டையில் பதுக்கி வைத்து குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்தனர். இதை அந்த வழியே சென்ற சிலர் செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பிரிமியர் நகர் பஸ் நிறுத்தத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி மணப்பாறையை சேர்ந்த பேக்கரி ஊழியர் குமாரசாமி (வயது 30), புதுக்கோட்டை பொன்னமராவதியை சேர்ந்த பரமசிவம் (20). என்பது தெரியவந்தது. பரமசிவம் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.