கைது 
செய்திகள்

பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த வயலூர் ஏரிக்கரை அருகே வாலிபர்கள் சிலர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.

அப்போது எடுத்த புகைப்படங்களை அவர்கள் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு பரப்பினர். இதனை அறிந்த மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணைய்யன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வயலூர் பகுதியைச் சேர்ந்த ராகுல்ஸ்டீபன்ரா, அருண்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரை தேடி வருகிறார்கள்.