செய்திகள்

பாக். ராணுவத்தின் தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் பலி - இம்மாதத்தில் மட்டும் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள குப்வாரா, க்ரஜோரி, பூஞ்ச் மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினர். இந்திய பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பதிலடி கொடுத்தனர்.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் குண்டடிபட்டு இரு இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்புக்கும் பல மணிநேரங்களாக சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும், 9 வயது சிறுமியும் பலியாகினர். இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும், 12 பேர் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.