செய்திகள்

நெகமம் அருகே இரட்டை சகோதரிகள் மாயம்: தாய் போலீசில் புகார்

நெகமம் அருகே திருமணமான 3 மாதத்தில் இரட்டை சகோதரிகள் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இரட்டை சகோதரிகளை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வளர்மதி (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் நெகமம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

எனது மகள்கள் ராமாதேவி (வயது 25), லட்சுமி பிரியா (25). இவர்கள் 2 பேரும் இரட்டையர்கள். 2 பேரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்தேன்.சம்பவத்தன்று எனது மகள்கள் 2 பேரும் அவர்களது கணவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. எனவே மாயமான எனது 2 மகள்களையும் கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இரட்டை சகோதரிகள் ராமாதேவி, லட்சுமி பிரியா ஆகியோரை தேடி வருகிறார்கள்.