விபத்து (கோப்பு படம்) 
செய்திகள்

எகிப்தில் இரு லாரிகள் நேருக்குநேர் மோதல் - 12 பேர் உயிரிழப்பு

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இன்று இரு லாரிகள் நேருக்குநேராக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

கெய்ரோ:

எகிப்து நாட்டின் பல பகுதிகளில் மோசமான சாலைகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களால் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான புள்ளிவிபரங்களின்படி அந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 3087 உயிரிழந்துள்ளனர். சுமார் 12 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகேயுள்ள உள்ள அக்டோபர் சிட்டி பகுதிக்கு இன்று தொழிலாளர்களை பணிக்கு ஏற்றிச் சென்ற லாரி கிஸா மாகாணத்தில் எதிர்திசையில் வந்த மற்றொரு லாரியுடன் நேருக்குநேராக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT