செய்திகள்

டி.வி.எஸ். அபாச்சி RR310S வெளியீட்டு தேதி வெளியானது

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR310S மாடலின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அபாச்சி RR310S வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான டி.வி.எஸ். தனது முதல் ஃபுல்லிஃபேர்டு மோட்டார்சைக்கிளை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆட்டோகார் இந்திய தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய அபாச்சி RR310S மாடல் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்க புதிய குழு ஒன்றை டி.வி.எஸ். நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருன் சித்தார்த் தலைமையில் உருவாகியுள்ள புதிய குழு RR310S மற்றும் அபாச்சி பிரான்டினை கொண்டுள்ளது. பிரீமியம் வகை மற்றும் சர்வதேச வியாபார பிரிவு துணை தலைவர் பதிவியில் உள்ள அருன் சித்தார்த் தொடர்ந்து டி.வி.எஸ். ரேசிங் குழுவிற்கு தலைமை வகிப்பார் என கூறப்படுகிறகு.

முன்னதாக பலமுறை இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட அபாச்சி RR310S காப்புரிமை புகைப்படமும் வலைத்தளத்தில் கசிந்தது. இந்தியாவில் வெளியாகும் போது டி.வி.எஸ். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக அபாச்சி RR310S இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபாச்சி RR310S மாடலில் பி.எம்.டபுள்யூ. G310R சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 313சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34bhp மற்றும் 28Nm டார்கியூ கொண்டுள்ளது. இத்துடன் இந்திய சாலைகளுக்கு ஏற்ப இன்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதிய அபாச்சி RR310S மாடலின் முன்பக்கம் தலைகீழான ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் சீட் அமைப்பு மற்றும் ABS வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.