செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட் திடீர் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட்டில் திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒரு யூனிட்டில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்டுகளில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதனால் அவ்வப்போது யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது. சில நேரங்களில் நிலக்கரியின் இருப்புக் குறைவதாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைபட்டு வந்தது.

இந்த நிலையில் 4-வது யூனிட்டில் திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews