செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.

மாலை மலர்

தூத்துக்குடி:

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டம் மாப்பிள்ளையூரணி, ஸ்ரீவைகுண்டம் கொற்கை, திருச்செந்தூர் கடையனோடை,  சாத்தான்குளம் கருங்கடல், கோவில்பட்டி சிவந்திபட்டி, விளாத்திகுளம் எஸ்.குமாரகிரி, எட்டயபுரம்  குமாரகிரி, ஓட்டப்பிடாரம் எப்போதும்வென்றான், கயத்தார்  சிதம்பரம்பட்டி ஆகிய கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. 

முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.