செய்திகள்

தூத்துக்குடியில் தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

தூத்துக்குடியில் தீபா பேரவையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தீபா பேரவையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

உடன்குடி தீபா பேரவை ஒன்றியச் செயலாளர் ஜெயகண்ணன், நகரச் செயலாளர் சுனைதீன், ஒன்றிய மகளிரணிச் செயலாளர் நிர்மலா, நகர மகளிரணி செயலாளர் விஜயா, அவைத்தலைவர் சித்திரவேல் உள்பட பலர் கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் செல்லத்துரை, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மேற்கு பகுதிச் செயலாளர் முருகன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஜோதிமணி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ் குமார், தலைமை கழகபேச்சாளர் முருகானந்தம், ராஜசேகர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் சங்கர், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

SCROLL FOR NEXT