செய்திகள்

ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி நுழைந்த துருக்கி நாட்டை சேர்ந்த ஆசாமி கைது

இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி படகு வழியாக ராமேஸ்வரத்துக்கு வந்த துருக்கி நாட்டை சேர்ந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் கடற்படை முகாம் அமைந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பைபர் படகில் வந்த ஆசாமியை மடக்கிப் பிடித்தனர்.  

விசாரணையில், அவர் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவரீன் என்பதும், இலங்கையில் இருந்து அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் படகில் வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews