செய்திகள்

கத்தாருடனான உறவு தொடரும் என துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

அங்காரா: சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 6 அரபு நாடுகள் துண்டித்தன. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா, மாலத்தீவு ஆகிய நாடுகள் மேற்கண்ட நடவடிக்கையை மேற்கொண்டன.

இதனால் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

SCROLL FOR NEXT