மதுரை:
மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
1158 மீனவர்களை மீட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.
ஆர்.கே. நகரில் எடப்பாடி- பன்னீர்செல்வம் அணிகள் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனின் பொய் புகாரில் கைதான எங்கள் தொண்டர்கள் 3 பேரை நீதிபதியே ஏற்க மறுத்துள்ளார். இது போன்ற பொய் வழக்குகள் தான் போட முடியும்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்த வரைத்தான் தற்போது பா.ஜ.க. வேட்பாளராக்கியுள்ளது. இதுதான் தமிழகத்தில் பா.ஜ.க.வின் நிலை.
கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன் படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செல்லூர் ராஜூ கூறியுள்ளாரே என்று கேட்கிறீர்கள். சட்டம் தெரிந்தவர் நடவடிக்கை எடுக்கட்டும். கல்லாபெட்டி சிங்காரம் போல் செல்லூர் ராஜூ பேசி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது எடப்பாடியை தூக்கி பிடிக்கும் அமைச்சர்கள் அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளில் காணாமல் போய்விடுவார்கள்.
நடிகர் விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவருக்கும் எனக்கும் நட்பை தவிர ஒன்றும் இல்லை.
ஆனால் ஆளும் எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் விதிகளை மீறி பணப்பட்டுவாடா செய்தால் விஷால் தொண்டர்களும், எங்கள் தொண்டர்களும் தடுத்து நிறுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.