செய்திகள்

முதல்வர் பதவி கேட்கிறார் ஓ.பி.எஸ். - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகி ஓராண்டு ஆவதால் ஓபிஎஸ் இப்போது முதல்வர் பதவி கேட்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #OPS #EPS #ADMK

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, சென்னையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-

ஈ.பி.எஸ். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆவதால் முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். கேட்கிறார். பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் அவர், பிரதமர் சொன்னதால் துணை முதல்வர் பதவியை ஏற்றதாக கூறியிருக்கிறார்.

இப்போது என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #OPS #EPS #ADMK #tamilnews