செய்திகள்

வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷாலுக்கு டி.டி.வி.தினகரன் நன்றி

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷாலுக்கு டி.டி.வி தினகரன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‘குக்கர் சின்னத்தில்  வெற்றி பெற்ற தினகரன், ஆர்.கே. நகரில் உள்ள அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரித்து, திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள தினகரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த விஷாலுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.