செய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியில் தகுதி நீக்கம்: தினகரன்

குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக 18 பேரை தகுதி நீக்கம் செய்து உள்ளனர் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பற்றி டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி அணியினருக்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் மெஜாரிட்டி இல்லை. அவர்கள் பெரும்பான்மை இல்லாத அரசு என்று ஆரம்பம் முதலே கூறி வந்தோம்.

குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக 18 பேரை அவர்கள் தகுதி நீக்கம் செய்து உள்ளனர்.

மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறார்கள்.

நிச்சயம் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். நாங்கள் நீதியை பெறுவோம். நிச்சயம் வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள்.

நீதி என்றைக்கும் வெல்லும். தியாகம் என்றைக்கும் வெல்லும். துரோகம் என்றும் வென்றதாக சரித்திரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT