சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது ஒன்பதாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே:-
சுயேச்சை - தினகரன் : 44,094
அதிமுக - மதுசூதனன்: 22,013
திமுக - மருதுகணேஷ்: 11,412
நாம் தமிழர் - கலைக்கோட்டுதயம்: 1,933
நோட்டா: 1030
பாஜக - கரு. நாகராஜன்:571
சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.