சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் இன்று அமைதியான முறையில் நடந்து வருகிறது.
தற்போது பதினொன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே:-
சுயேச்சை - தினகரன் : 54,316
அ.தி.மு.க. - மதுசூதனன்: 27,737
தி.மு.க. - மருதுகணேஷ்: 14,431
நாம் தமிழர் - கலைக்கோட்டுதயம்: 2347
பா.ஜ.க. - கரு. நாகராஜன்: 712
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில் 11-வது சுற்று முடிவில் சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.