செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அவசர அழைப்பு

அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட நிர்வாகிகளை ஆகஸ்ட் 5-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வருமாறு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினரகன் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட டி.டி.வி.தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருக்கப்போவதாக கூறினார். அந்த கெடு வருகிற 4-ந்தேதியுடன் முடிகிறது.

இதனைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளேன் என்று தெரிவித்தார். இதனை தினகரன் தொடர்ந்து கூறி வந்துள்ளார். அவர் விதித்த கெடு முடிய இன்னும் 4 நாட்கள் உள்ளன.

தினகரனின் சுற்றுப்பயணம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

5-ந்தேதி அன்று தினகரன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அன்றைய தினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைமை கழகத்துக்கு வந்தால் அதனை எதிர் கொள்ள தினகரன் தரப்பினர் தயாராகவே இருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகி உள்ளன.