மன்னார்குடி:
அ.தி.மு.க. 3 அணியாக செயல்பட்டு வருகிறது. டி.டி.வி.தினகரன் தனியாக நிர்வாகிகளை நியமித்தார். அதன்படி திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ். காமராஜூக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்து மன்னார்குடி பழைய பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி பகுதியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன் படங்கள் இடம் பெற்று இருந்தது.
இதனை யாரோ மர்ம ஆசாமிகள் கிழித்து விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் திருவாரூர் பாலம் மற்றும் வடக்கு விதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனரில் அமைச்சர் காமராஜ் படம் மட்டும் கிழிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து மன்னார்குடி நகர செயலாளர் மாதவன் போலீசில் புகார் செய்து இருந்தார். அதன் பேரில் பேனரை கிழித்ததாக மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த அய்யா ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர்.
இவர் சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.