பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் இன்று காலை மாலை அணிவித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் மக்கள் மனநிலையை அறிந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசு செயல்படுத்தாது என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக உள்ளோம். இதனால்தான் வேலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்.
தற்போது தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கும் போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.