செய்திகள்

திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் - டிடிவி தினகரன்

திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran #Tiruvarurbyelection

மாலை மலர்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின்பு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈபிஎஸ் - ஓபிஎஸ் உடன் அமமுக இணைப்பு என்ற எண்ணமே எனக்கு இல்லை. என்னுடைய தற்போதைய எண்ணம் எல்லாம் திருவாரூர் தேர்தல் பற்றி மட்டுமே.

திருவாரூர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.