சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று. கொண்ட லட்சியத்திற்காக கடைசி மூச்சு வரை நெஞ்சு நிமிர்த்தி நின்றதால்தான் மருது சகோதரர்களை இப்போதும் நாம் கொண்டாடுகிறோம்.
குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றி, அவர்கள் வழியில் சாதி, மதம் பார்க்காமல் நம் தேசத்தையும், மக்களையும் நேசித்திடுவோம். வீரத்தையும், தியாகத்தையும் தூக்கிப் பிடித்து, துரோகத்தை வேரறுத்து, தீயவற்றை வீழ்த்தி வென்று காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.