சென்னை:
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான தங்கதமிழ் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் நாம், ஜெயலலிதாவின் கொள்கைகளை ஆண்டாண்டு காலத்திற்கு நிலைநிறுத்திட, டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ளார்.
அதன் முதற்கட்டமாக தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளான, திருவிடைமருதூர் தொகுதியில் 2-2-2018 அன்றும், கும்பகோணம் தொகுதியில் 3-2-2018 அன்றும், பாபநாசம் தொகுதியில் 4-2-2018 அன்றும், திருவையாறு தொகுதியில் 5-2-2018 அன்றும் மேற்கொள்ள உள்ளார். தமிழ் சமூகத்தின் எதிர்கால ஏற்றத்திற்கான இந்த மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews