செய்திகள்

பஸ் ஸ்டிரைக்: ஜெ. அரசு என நிரூபிக்கும் வகையில் தீர்வு வேண்டும்: டி.டி.வி கன்னிப்பேச்சு

ஜெயலலிதா அரசு என நிரூபிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சட்டசபையில் டி.டி.வி தினகரன் முதல் முறையாக பேசியுள்ளார். #TNAssembly #TTVDhinakaran

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று நடந்து வருகின்றது. ஒக்கி புயலில் அரசின் செயல்பாடுகள், உயர்கல்வித்துறையில் அரசின் சாதனைகள் என பல முக்கிய விவகாரங்கள் இன்று விவாதிக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் ஸ்டிரைக் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

ஆர்.கே நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ள டி.டி.வி தினகரன் இந்த பிரச்சனை குறித்து பேசினார். “ஜெயலலிதா அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது கன்னிப்பேச்சில் தினகரன் கூறினார். #TNAssembly #TTVDhinakaran

SCROLL FOR NEXT