டிடிவி தினகரன் 
செய்திகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நியமனம்- தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகளை நியமித்து டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ் காணும் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

துணைப்பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்க சாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல்.

தலைமை நிலையச் செயலாளராக ஆர்.மனோகரன்.

கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.