திருப்பதியில் செவ்வாய்க்கிழமை காலை மாதந்தோறும் நடைபெறும் அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் சுதாகர் யாதவ், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சுதாகர் யாதவ் கூறியதாவது:-
புதிதாக உருவாக்கப்படும் ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள வெங்கடபாளையத்தில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது.
திருமலையில் உள்ள துரித உணவகங்கள், தேநீர் விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.