செய்திகள்

சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி - டிரம்ப் அறிவிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump #USTariff

மாலை மலர்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா  கூடுதல் வரி விதித்தது.

மேலும், சீனா தனது நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்த வரிவிதிப்புக்கு பதில் நடவடிக்கையாக எங்களின் விவசாய பொருட்கள், தொழில்பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவும் கூடுதல் வரி விதிக்குமேயானால், நாங்கள் மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.