செய்திகள்

புதினுடனான அடுத்த சந்திப்பை எதிர்ப்பார்த்து இருக்கிறேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்த சந்திப்புக்காக காத்திருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trumph

மாலை மலர்

உலக நாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இரு துருவங்களாக இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளில் பகை இருந்துவந்தது. இந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரது சந்திப்பு நடைபெற்றது.

வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாட்டு அதிபர்களும் தங்கள் பகை மறந்து, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.