வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் அதிபர் பாரம்பரிய உரையாற்றுவது வழக்கம்.
அதையொட்டி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:-
மக்களுக்கு சேவை செய்யவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் எனவே நாம் அனைவரும் (ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி) வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான அழைப்பை இன்று விடுக்கிறேன்.
அமெரிக்கா தனது பொருளாதார திட்டத்தை மாற்றி அமைதுள்ளது. பொருளாதாரத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை முடிந்து விட்டது. தற்போது புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். மற்ற நாடுகளுடன் அவை நேர்த்தியாகவும், பரஸ்பர வர்த்தகமாகவும் இருக்கும்.
தேர்தலுக்கு பிறகு 24 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சம்பள பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அவை உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலையில்லா பிரச்சினை மிகவும் குறைந்துவிட்டது. திறமை மற்றும் தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு சட்டம் இயற்ற எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் பேசினார்.
அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. #Trump #tamilnews