அமெரிக்க பாராளுமன்ற மரபுகளின்படி ஆண்டின் ஆரம்பத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர்கள் பேசுவது வழக்கம். ஆனால், மெக்சிகோ எல்லைப்பகுதியில் மதில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க எம்.பி.க்கள் அனுமதி அளிக்காததால் இந்த ஆண்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மாட்டேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பிடிவாதம் செய்தார்.
தற்போது இவ்விவகாரத்தில் சற்று சமரசம் ஏற்பட்டு சுமுகநிலை திரும்பியுள்ளதால் பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்று உரையாற்றினார்.
‘நமது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாத ஒரு குடியுரிமைத்துறை கொள்கையை நாம் வகுத்தாக வேண்டும். வெளிநாடுகளில் இருந்து முறையான அனுமதியுடன் இங்குவந்து வேலை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கானவர்களையும் சேர்த்துத்தான் நான் நமது நாட்டு மக்கள் என்று குறிப்பிடுகிறேன்.