இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் டொனால்ட் டிரம்ப் 
செய்திகள்

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் - மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்தார்.

மாலை மலர்

பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947-ம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948-ம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. 1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது.