மன்னார்குடியில் விபத்தில் சிக்கிய பஸ்-லாரியை காணலாம் 
செய்திகள்

மன்னார்குடியில் பஸ் மீது லாரி மோதியது- காயமின்றி தப்பிய பயணிகள்

மன்னார்குடியில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

மாலை மலர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை மன்னார்குடி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் ஓட்டி சென்றார். மன்னார்குடி 3-ம் தெருவில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் சரக்கு இறக்கி விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி மற்றும் லாரியின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் சிதறி விழுந்தன. இதைப்போல லாரியின் முன்பக்க கண்ணாடிகளும் உடைந்து சிதறின.