செய்திகள்

வில்லியனூர் அருகே லாரி மோதி வியாபாரி பலி

வில்லியனூர் அருகே லாரி மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள பள்ளித்தென்னலை சேர்ந்தவர் தனசேகர். (வயது 56). கடைகளுக்கு தின்பண்டம் சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று வியாபாரத்துக்காக பல்வேறு கிராமங்களுக்கு சென்று விட்டு வடமங்கலம் அருகே சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. அதில் சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக வில்லியனூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனசேகருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

SCROLL FOR NEXT