திருவனந்தபுரம் டென்னிஸ் கிளப் சர்வதேச டென்னிஸ் பெடரேசனின் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஜெர்மனி, ஸ்டெயின், நெதர்லாந்து, இத்தாலி, உக்ரைன், பிரேசில் மற்றும் பல நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஒருவாரம் நடைபெற இருக்கும் இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 15 ஆயிரம் டாலர் ஆகும். இந்தியா சார்பில் சித்தார்த் ராவத், அர்ஜூன் காதே, விஜய் சுந்தர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.