செய்திகள்

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை பாதிக்கிறது: சிவா எம்.பி. பேச்சு

மத்திய அரசின் திட்டங்கள் சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது என்று சிவா எம்.பி. பேசினார்.

மாலை மலர்

கரூர்:

தி.மு.க. பேச்சாளர்களுக்கான நெறிமுறைப் படுத்துதல் கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.

அப்போது,``மத்திய அரசின் திட்டங்கள் சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். மேடைகளை களமாக பயன் படுத்தி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், கரூர்  உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி,  நெல்லிக்குப்பம் புகழேந்தி எம்.எல்.ஏ. மற்றும் கரூர், திருச்சி வடக்கு, தெற்கு, அரியலூர், பெரம்பலூர், சேலம் கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, ஈரோடு வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. பேச்சாளர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பேச்சாளர்கள் மேடைகளில் பேச வேண்டிய விஷயங்கள், எதனை மையமாக வைத்து பேசுதல் என்பது உள்பட நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.