திருச்சி:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள இடையப்பட்டி எறும்பீஸ்வரர் கோவில் நகர் பகுதியை சேர்ந்த தொழிலாளி சக்திவேல். கடந்த 8.8.2015 அன்று அந்த பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி, சக்திவேலிடம் இருந்து ரூ.2500 பணத்தை பறித்தார்.
இது குறித்து சக்திவேல் துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில், அப்போதைய இன்ஸ்பெக்டர், சூர்யாவை கைது செய்து வழக்குப்பதிவும் செய்தார். இந்த வழக்கு திருச்சி முதலாவது சார்பு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், இன்ஸ்பெக்டர், சாட்சிகளுடன் நேற்று கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்ஸ்பெக்டர் ஆஜராக வில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டருக்கு ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி இன்று உத்தர விட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.