செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.41 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சென்னை பயணியிடம் ரூ.41 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு மலேசியாவில் இருந்து தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னை வியாசார்பாடியை சேர்ந்த ஹைதர்அலி என்பவரின் லேப்டாப் சார்ஜரை சோதனை செய்த போது, அதில் அவர் 1350 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.41 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹைதர் அலியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

SCROLL FOR NEXT