திருச்சி விமான நிலையம் 
செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் நேற்றிரவு திருச்சிக்கு வந்தது. அப்போது பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ. 24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கே.கே. நகர்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் நேற்றிரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்த   பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது  சென்னையைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தான் கொண்டு வந்த வெள்ளை நிற வெளிநாட்டு கைக் கடிகாரங்களில் குரோம் பூசிய தங்கத் தகடுகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. 

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 23.80 லட்சம் எனவும் இதன் மொத்த எடை 690 கிராம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.